திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்க விரும்புவோர் அக்டோபர் 21 முதல் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அன்னதானம் வழங்குவதற்கான முக்கிய விபரங்கள்
| விவரங்கள் | முழு விபரம் |
| விண்ணப்பக் காலம் | அக்டோபர் 21 முதல் நவம்பர் 11 வரை |
| விண்ணப்பிக்கும் இணையதளம் | foscos.fssai.gov.in (FSSAI FoSCoS) |
| விண்ணப்பக் கட்டணம் | ₹100 |
| நேரடி விண்ணப்ப அலுவலகம் | உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை |
Also Read: Tiruvannamalai Karthigai Deepam 2026: Annadhanam Online Registration Opens
தேவையான ஆவணங்கள்
- விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
- முகவரிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்று நகல்.
- அன்னதானம் வழங்குபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் ஆதார் அட்டை நகல்.
மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்
- அனுமதிக்கப்பட்ட இடம்: மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட நாள், நேரம் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.
- கிரிவலப்பாதை விதிமுறை: பக்தர்களின் நடைபயணத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், கிரிவலப்பாதையில் இருந்து 100 மீட்டர் உட்புறம் மட்டுமே அன்னதான பந்தல்களை அமைக்க வேண்டும்.
- பிளாஸ்டிக் தடை: பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொட்டலமிட்ட உணவுகளை (Food Packets) வழங்கக் கூடாது. வாழை இலை, பாக்குமட்டை அல்லது தொன்னைகளில் மட்டுமே உணவுகளைப் பரிமாற வேண்டும்.
- வாகன அன்னதானம் தடை: நகரும் வாகனங்களில் சென்று அன்னதானம் வழங்கக் கூடாது.
- தூய்மை மற்றும் சுகாதாரம்: உணவு தயாரிப்பில் செயற்கை நிறமிகளைப் பயன்படுத்தக் கூடாது. அன்னதானம் வழங்கும் இடங்களில் குப்பைத் தொட்டிகளை வைத்து, கழிவுகளை அன்னதான அமைப்பாளர்களே சேகரித்து அகற்றி இடத்தை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
Also Read: Tiruvannamalai Karthigai Deepam 2026 Date, Schedule: திருவண்ணாமலை கார்த்திகை தீபம்
தொடர்புக் எண்கள் மற்றும் புகார்களுக்கு
- அலுவலகத் தொடர்பு எண்கள்:
04175-237416|9894385924 - உணவு பாதுகாப்புத் துறை வாட்ஸ்-அப் புகார் எண்: 94440 42322






