-0.1 C
New York
Wednesday, March 11, 2026
Home Blog Page 12

Pradosham November 27, 2020 – Date & Time

0

Pradosham occur every month depends on the moon position. The Pradosham will occur sometime twice the English month. Below mentioned dates are November month Pradosham dates.

27 November 2020 – Friday – Pradosham

Also Read : பிரதோஷ தினத்தில் பாட வேண்டிய மந்திரங்கள்

Next Month Pradhosam dates

DayDate
Saturday12 December 2020
Sunday27 December 2020

பிரதோஷ தினத்தில் பாட வேண்டிய மந்திரங்கள்

0

பிரதோஷ தினத்தில் நாம் ஈசனையும், நந்தி பகவானையும் வழிபட்டு நம் தோஷங்களை போக்கிக் கொள்வோம். இந்த பிரதோஷ தினத்தில் விரதம் இருப்பதோடு சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்குரிய மந்திரங்களை உச்சரித்து பரவசமைடைவோம்.

ஈஸ்வர தியானம் மந்திரம்

நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்
பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம்.

சிவாய நம ஓம் சிவாய நம:
சிவாய நம ஓம் நமசிவாய
சிவாய நம ஓம் சிவாய நம:

சிவாய நம ஓம் நமசிவாய
சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்
ஹர ஹர ஹர ஹர நமசிவாய – சிவாய நம
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய நமசிவாய – சிவாய நம
ஓம் சிவாய சங்கரா

ஓம் சிவாய நமசிவாய ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
சுந்தரக் கலாதரனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

கங்கையைத் தரித்தவரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
காசிநாதா விசுவநாதா ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

பார்வதி மணாளனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆடும்பாம்பை அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

ஆனைமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆறுமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா

சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஐயப்பன் ஐயனாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

நந்தி அஷ்டகம் :

நந்தீஸ்வரர் 108 போற்றி

சிவாலயங்களில் பிரதோஷ காலத்தில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியை படியுங்கள்.

1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி
2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி
3. ஓம் அனுகூலனே போற்றி
4. ஓம் அருந்துணையே போற்றி
5. ஓம் அண்ணலே போற்றி

6. ஓம் அருள்வடிவே போற்றி
7. ஓம் அனுமன் ஆனவனே போற்றி
8. ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி
9. ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி
10. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி

11. ஓம் ஆலயம் முன் இருப்பவனே போற்றி
12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
13. ஓம் ஆதரிப்பவனே போற்றி
14. ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி
15. ஓம் இனியவனே போற்றி

16. ஓம் இணையிலானே போற்றி
17. ஓம் இடப உருவனே போற்றி
18. ஓம் இமயத்திருப்பவனேபோற்றி
19. ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி
20. ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி

21. ஓம் ஈர்ப்பவனே போற்றி
22. ஓம் ஈடில்லாதவனே போற்றி
23. ஓம் உத்தமனே போற்றி
24. ஓம் உபகாரனே போற்றி
25. ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி

26. ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி
27. ஓம் எளியவனே போற்றி
28. ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
29. ஓம் ஐயனே போற்றி
30. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி

31. ஓம் கனிவுருவே போற்றி
32. ஓம் களிப்புருவே போற்றி
33. ஓம் களங்கமிலானே போற்றி
34. ஓம் கர்வம் குலைப்போனே போற்றி
35. ஓம் கலைக்களஞ்சியமே போற்றி

36. ஓம் கயிலைக் காவலனே போற்றி
37. ஓம் கம்பீர உருவனே போற்றி
38. ஓம் குணநிதியே போற்றி
39. ஓம் குருபரனே போற்றி
40. ஓம் குறை களைவோனே போற்றி

41. ஓம் கூத்தனோடு உறைபவனே போற்றி
42. ஓம் கோயில் நாயகனே போற்றி
43. ஓம் சிவபுரத்தனே போற்றி
44. ஓம் சிவதூதனே போற்றி
45. ஓம் சிவனடியானே போற்றி

46. ஓம் சிவகணத்தலைவனே போற்றி
47. ஓம் சிவஸ்வரூபனே போற்றி
48. ஓம் சிவஞான போதகனே போற்றி
49. ஓம் சிலாதர் மைந்தனே போற்றி
50. ஓம் சிரஞ்சீவியே போற்றி

51. ஓம் சுருதிகளைக் காத்தவனே போற்றி
52. ஓம் சைவம் வளர்ப்பவனே போற்றி
53. ஓம் சொக்கன் சேவகனே போற்றி
54. ஒம் சோகம் தீர்ப்பவனே போற்றி
55. ஓம் ஞானியே போற்றி

56. ஓம் ஞானோபதேசிகனே போற்றி
57. ஓம் தருமவிடையே போற்றி
58. ஓம் தயாபரனே போற்றி
59. ஓம் தளையறுப்பவனே போற்றி
60. ஓம் தட்சனை தண்டித்தவனே போற்றி

61. ஓம் தவசீலனே போற்றி
62. ஓம் தஞ்சம் அளிப்பவனே போற்றி
63. ஓம் தீதையழிப்பவனே போற்றி
64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி
65. ஓம் தூயோர் மனத்தமர்ந்தாய் போற்றி

66. ஓம் நந்தியே போற்றி
67. ஓம் நலமளிப்பவனே போற்றி
68. ஓம் நமனை வென்றவனே போற்றி
69. ஓம் நந்தனுக்கு அருளியவனே போற்றி
70. ஓம் நாடப்படுபவனே போற்றி

71. ஓம் நாட்டியப்பிரியனே போற்றி
72. ஓம் நாதனே போற்றி
73. ஓம் நிமலனே போற்றி
74. ஓம் நீறணிந்தவனே போற்றி
75. ஓம் நீதி காப்பவனே போற்றி

76. ஓம் பராக்கிரமனே போற்றி
77. ஓம் பக்தியில் ஆழ்ந்தவனே போற்றி
78. ஓம் பசவேசன் ஆனவனே போற்றி
79. ஓம் பகை அழிப்பவனே போற்றி
80. ஓம் பதமளிப்பவனே போற்றி

81. ஓம் பர்வதமானவனே போற்றி
82. ஓம் பிரம்பேந்தியவனே போற்றி
83. ஓம் புண்ணியனே போற்றி
84. ஓம் புரு÷ஷாத்தமனே போற்றி
85. ஓம் பெரியவனே போற்றி

86. ஓம் பெருமையனே போற்றி
87. ஓம் மஞ்சனே போற்றி
88. ஓம் மலநாசகனே போற்றி
89. ஓம் மகிழ்வளிப்பவனே போற்றி
90. ஓம் மறையே கால்களானவனே போற்றி

91. ஓம் மால்விடையே போற்றி
92. ஓம் மகாதேவனே போற்றி
93. ஓம் முனியவனே போற்றி
94. ஓம் முற்றும் உணர்ந்தவனே போற்றி
95. ஓம் யோகியே போற்றி

96. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி
97. ஓம் வள்ளலே போற்றி
98. ஓம் வல்லாளா போற்றி
99. ஓம் வித்தகனே போற்றி
100. ஓம் விண்ணோர் திலகமே போற்றி

101. ஓம் வீர உருவமே போற்றி
102. ஓம் வீரபத்திரனே போற்றி
103. ஓம் வெண்ணிற மேனியனே போற்றி
104. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
105. ஓம் வீரசைவ நாயகனே போற்றி

106. ஓம் ஸ்ரீ சைல நாதனே போற்றி
107. ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
108. ஓம் நந்திகேசுவரனே போற்றி போற்றி

ஓம் நமசிவாயம்

Deepavali Asthanam in Tirumala will be performed on 14th November 2021

The annual Deepavali Asthanam in Sri Venkateswara Swamy temple at Tirumala will be performed on November 14.

On this auspicious occasion, the Utsava Murthies of Sri Malayappa Swamy flanked by Sridevi and Bhudevi accompanied by Sri Viswaksena will be seated at Bangaru Vakili facing Garudalwar.

The religious staff will perform Asthanam where new silk clothes will be adorned to Moola Virat as well to utsava deities.

In view of this fete, all Arjitha Sevas including Kalyanotsavam, Unjal Seva, Arjita Brahmotsavam (all virtuals) except Sahasra Deepalankara Seva [Virtual] are cancelled by TTD.

Source : TTD Portal

கிருஷ்ணரை பற்றி தெரிந்துகொள்ள சில குறிப்புகள்

கிருஷ்ணரை பற்றி தெரிந்துகொள்ள சில குறிப்புகள்

  1. மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம்.  
  2. நள்ளிரவு 12 மணிக்கு மதுராவில் உள்ள சிறைச்சாலையில் வசுதேவர் தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணர் பிறந்தார் .  
  3. கர்க்க முனிவர் தலைமையில் ஆயர்பாடியில் கிருஷ்ணருக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. 
  4. தாயாக இருந்து கிருஷ்ணருக்கு தாலாட்டு பாடியவர் பெரியாழ்வார்.  
  5. பாகவதம் என்னும் நூலில் பத்தாவது காண்டத்தில் கிருஷ்ணரின் வரலாறு உள்ளது. பாகவதத்தின் பத்தாம் காண்டம் “சர்க்கரை பந்தலில் தேன் மழை”  என போற்றப்படுகிறது .
  6. கிருஷ்ணரின் ஜாதகம் விவரம் கமானீக்யா என்னும் நூலில் உள்ளது .
  7. கிருஷ்ணர் ஏழாம் வயதில் அசுரனாக கம்சனை வதம் செய்தார்.
  8.  அசுரன் என்பவன் பாம்பு வடிவில் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான்.
  9. கிருஷ்ணர் மீது அவர் பாடிய சோஸ்திரம் பஜகோவிந்தம்.
  10. கிருஷ்ணஜெயந்தி பூஜை இரவு 7 மணிக்கு செய்வது விசேஷம்.
  11. கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் இட்டு மகிழ்வர் 
  12. ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்பது கிருஷ்ணர் கூறிய மந்திரம்.
  13. கிருஷ்ணவதாரம் முடிந்த பிறகு பூமியில் கலி யுகம் தொடங்கியது

இந்த வார முக்கிய நாட்கள்

0

இந்த வார முக்கிய நாட்கள் 

ஆக 7 ஆடி 23 :  மகா சங்கடஹர சதுர்த்தி இருக்கன்குடி மாரியம்மன் உற்சவம் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல்.

ஆக 8 ஆடி 24 :  செவ்வாய்பேட்டை மாரியம்மன் இருக்கன்குடி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  கோயில் வரதராஜ திருமஞ்சனம்  குச்சனூர் சனீஸ்வரர்  சிறப்பு  ஆராதனை

ஆக 9 ஆடி 25 :சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் எதிரில் அனுமன் திருமஞ்சனம்,  கண்ணூறு கழிக்க,  எண்ணெய் தேய்த்துக் குளிக்க நல்ல நாள்.

ஆக 10 ஆடி 26 :இருக்கன்குடி மாரியம்மன், திருக்குளம் சுப்பிரமணியர் பவனி, சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சப்தாவரணம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம்

ஆக 11 ஆடி 27 : கிருஷ்ண ஜெயந்தி, சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடி அருளல், தேனி மாவட்டம் குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி

ஆக 12 ஆடி 28 : கார்த்திகை விரதம், திருத்தணி முருகன் தெப்பம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் திருமஞ்சனம்.

ஆக 13 ஆடி 29 : தேரெழுந்தூர, திண்டுக்கல் தேவகோட்டை, மிலட்டூர் பிள்ளையார்பட்டி கோவில்களில் விநாயகர் உற்சவம் 

Last week : https://www.dailytemple.in/this-week-important-functions/

இந்த வாரம் – முக்கிய விரத நாட்கள்

0

இந்த வாரம்: முக்கிய விரத நாட்கள் 

ஆடி 16,  ஜூலை 31:  

 வரலட்சுமி விரதம்,

 வரலட்சுமி தாயாருக்கு சக்கரை பொங்கல் பால் பாயாசம் படைத்து வழிபடுதல,

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிறப்பு வழிபாடு, 

அழகர்கோவில் கள்ளழகர் காளிங்க நர்த்தனம் கோலம்,

 திருப்பதி ஏழுமலையான் சமஸ்தானம் எழுந்தருளல்.

ஆடி 17, ஆக 1 : 

 மகா பிரதோஷம், 

மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் நந்தீஸ்வரர் அபிஷேகம்,

சங்கரன்கோவில் கோமதி அம்மன் சிறப்பு வழிபாடு,

அழகர்கோவில் கள்ளழகர் சூர்ணோற்சவம்,

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருமஞ்சனம்

ஆடி 18,  ஆக 2 :  

ஆடிப்பெருக்கு,  

நதிக்கரைகளில் புனித நீராடல்,

ஆடித்தபசு சங்கரன்கோவில் கோமதியம்மன் தபசுக் காட்சி,

அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் வெண்ணெய் தாழி சேவை,

அகோபில மடம் 14-ஆவது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம் பட்டினத்தார் குருபூஜை ஆளவந்தார் திருநட்சத்திரம்.

ஆடி 19,  ஆக 3 : 

பவுர்ணமி, 

ஆவணி அவிட்டம்,

ரிக் யாஜூர் உபகர்ம, 

திருவோண விரதம், 

பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல், 

கீழ் திருப்பதி கல்வெங்கடேசர் திருமஞ்சனம், 

தெற்காழ்வான் திருநட்சத்திரம்.

ஆடி 20,  ஆக 4 : 

காயத்ரி ஜபம், 

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சக்தி அழைப்பு, 

உருள் தாண்டவ காட்சி அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் தீர்த்தவாரி, 

சுவாமிமலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடி அருளல், 

கரிநாள்

ஆடி 21,  ஆக 5 : 

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பொங்கல், 

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மர் திருமஞ்சனம்

ஆடி 22  ஆக 6 : 

 சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்,

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருமஞ்சனம்.

மகாலட்சுமிக்கு விருப்பமான 10 செயல்கள்

மகாலட்சுமிக்கு விருப்பமான 10 செயல்கள்

  1. தினமும் வாசல் தெளித்து கோலம் இடுதல்
  2. காலையில் நீராடி விட்டு சமைத்தல்
  3. உதய நேரத்தில் கிழக்கு நோக்கி வணங்குதல்
  4. ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களை படித்தல்
  5. வாரம் ஒருமுறை வீட்டை  நீரால் அலசுதல்
  6. வெள்ளிக்கிழமை மாலை விளக்கு ஏற்றுதல்
  7. வாரம் ஒருமுறை கோவில் தரிசனம்
  8. சிரித்த முகத்துடன் பிறரிடம் பேசிப் பழகுதல்
  9. அன்னம்,  ஆடை தானம் செய்தல்
  10. பசுவுக்கு  பழம்,  கீரை  கொடுத்து  வழிபடுதல்