Mahalaya Amavasai September 2022 Date – மகாளய அமாவாசை 2022
Mahalaya Amavasai September 2022 Date – மகாளய அமாவாசை 2022
பித்ரு வழிபாட்டிற்கு உகந்த நாள் மகாளய அமாவாசை. மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. எனவே, முன்னோர்களின் ஆசிகளை முழுமையாக பெற சிரத்தையுடன் அவர்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும்.
அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதம் மாதம் வரும் அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது. அவ்வாறு இயலவில்லை என்றால், மகாளய அமாவாசை அன்று மட்டுமாவது செய்ய வேண்டும்
மகாளய அமவாசை அன்று அனைத்து முன்னோர்களையும் நினைவு கூற வேண்டும். புனித நீர் நிலைகளுக்கு, அதாவது கடல் அல்லது ஆறுகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து, அவர்களது ஆசியை பெற தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. மகாளய அமாவாசை தினத்தில் எறும்பு, காகம், நாய், பூனை, பசு மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் ஒரு சேர கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன
25 September 2022 – Sunday – Amavasya – Mahalaya Amavasai
Mahalaya Amavasai 2022 Date & Time – மகாளய அமவாசை