திருப்பாவை 2021 : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 17-ந்தேதி முதல் திருப்பாவை.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 17-ந்தேதி முதல் திருப்பாவை.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 17-ந்தேதி முதல் சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவை நடைபெறும். கோவிலில் ஒரு மாத காலம் திருப்பாவை பாராயணம் பாடப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் முக்கிய விழாக்களில் ஒன்றான தனுர்மாத விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் மதியம் 12.26 மணிக்கு தொடங்கும் தனுர் நாழிகையை முன்னிட்டு 17-ந் தேதி முதல் நடத்தப்படும் சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவை நடைபெறும். தனுர் மாதத்தில் சூரிய உதயத்திற்கு 1½ மணி நேரத்திற்கு முன்பு விஷ்ணுவுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்கின்றனர்.
திருப்பாவை ஆழ்வார் திருமறையின் ஒரு பகுதி. குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் மிகவும் பிரபலம். கோவிலில் ஒரு மாத காலம் திருப்பாவை பாராயணம் பாடப்படும். திருப்பாவை சேவை தனிமையில் நடக்கிறது.