இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் : இணையதளம் மூலம் தரிசிக்கலாம்
கொரோனா நோய் தொற்று காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருக்கல்யாண வைபவம் மட்டும் இன்று (திங்கட்கிழமை) காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை உள்ள நிலையில் திருக்கல்யாண நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் www.tnhrce.gov.in மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் இணையதளம் www.maduraimeenakshi.org ஆகியவற்றிலும், கோவில் முகநூல் பக்கத்திலும் மற்றும் திருக்கோவில் யூ டியூப் அலைவரிசையிலும் நேரடியாக ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியை நேரடியாக பல பக்தர்கள் பார்த்து அம்மன் அருள் பெற்றனர். நேரடி ஒளிபரப்பு பார்க்க தவறிவர்களுக்காக யூடூபில் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பக்தர்கள் திருக்கல்யாணம் நிகழ்ச்சியை பார்க்கலாம்
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்