காரடையான் நோன்பு 2020 பூஜை செய்ய நல்ல நேரம்
காரடையான் நோன்பு 2020 பூஜை செய்ய நல்ல நேரம்
தங்களது கணவருக்கு இடையூறுகள் வராமல் இருக்க ஒவ்வொரு பெண்களும் அனுஷ்டிக்கும் விரதமே ‘காரடையான் நோன்பு’ ஆகும். இந்த நோன்பு 14-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
காரடையன் நோன்பு ஒரு முக்கியமான நாளாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும்.. மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் தொடங்கும் தருணத்தில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து, பங்குனி முதல் நாள் காலையில் இந்த விரதத்தை முடிப்பார்கள். இந்த நோன்புக்கு பல பெயர்கள் உள்ளது, முக்கியமாக ‘காமாட்சி நோன்பு’, ‘கேதார கவுரி விரதம்’, ‘சாவித்திரி விரதம்’ என்று பெயர்கள் உண்டு .
பூஜை நேரம்:அதிகாலை 4 மணி – 5:30க்குள்
Karadaiyan Nombu : 14th March 2020
Karadaiyan Nombu Vratham : 06:17 AM to 12:09 PM
Duration : 05 Hours 52 Mins
மஞ்சள் சரடு முகூர்த்தம் / Manjal Saradu Muhurtham : 12:09 PM
நோன்பின் சிறப்பு : எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதிவிரதத்தைப் போற்றவும், உயிருடன் இருக்கும் தங்கள் கணவர்கள், சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும் பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.
Also Read : Mylapore Kapaleeswar Temple Panguni Festival 2020 Schedule