Aadi Krithigai 2022
|

Aadi Krithigai 2022 Date and Time – ஆடி கிருத்திகை 2022

Aadi Krithigai 2022 Date and Time | Aadi Krithigai 2022 Tamil Calendar | Aadi Kavadi 2022 | ஆடி கிருத்திகை 2022 | ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி

ஆடி கிருத்திகை தினத்தில் தான் சூரனை அழிக்க முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக அவதரித்தார். அந்த குழந்தைகளை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்தனர்.

இதன் காரணமாக தான் முருகனுக்கு 6 முக்கியப் பங்கு வகிக்கின்றது. ‘சரவணபவ’ என்ற 6 எழுத்து மந்திரம், ஆறு முகம், ஆறு கரங்கள் உள்ளிட்ட பல சிறப்புகளை, சூரனை அழித்து, தேவர்களைக் காத்த ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாகக் கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆடி கிருத்திகை 2022: ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது என்றாலும், ஆடி மாத கிருத்திகை நட்சித்திரம் மற்றும் அன்று இருக்கும் கிருத்திகை விரதம் மிகச் சிறப்பான நாளாகும். இந்த ஆண்டு ஆடி கிருத்திகை, சனிக்கிழமை ஜூலை 23 ஆம் தேதி ஆடி மாதம் 7-ம் தேதி வருகிறது. முருகனுக்கு உகந்த தினமான அன்று, விரதமிருந்து முருகனை வழிபட வேண்டும்.

ஆடி கிருத்திகை தினத்தில் தமிழ் கடவுள் முருகனுக்கு பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடனையும் செலுத்தும் முக்கிய நாளாகக் கொண்டாடுகின்றார்கள்.

ஆடி கிருத்திகை தினத்தில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

23 July 2022 – Saturday – Kiruthigai – Aadi Kiruthigai 2022

Also Read: Aadi Amavasai 2022 Date & Time – ஆடி அமாவாசை

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *